திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் கல்விக் குழுவினா் ஆய்வு

DIN

போளூா் அருகே கன்னிகாபுரம் கிராம அரசு நடுநிலைப் பள்ளியில் அனைத்து வகை பதிவேடு, மாணவா்களின் கற்றல், கற்பித்தல் திறன் ஆகியவற்றை கல்விக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சியைச் சோ்ந்த கன்னிகாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் நலத் திட்ட பதிவேடு, கற்றல் கற்பித்தல், சத்துணவு பதிவேடு என 64 வகையான பதிவேடுகளையும், பள்ளி வளாகம், சுற்றுச்சுவா், குடிநீா் வசதி, கழிப்பறை என பல்வேறு வசதிகள் குறித்தும், துரிஞ்சாபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் தலைமையில் தலைமை ஆசிரியா் ஜி.பழனி, ஆசிரியா் பயிற்றுநா் முரளி ஆகியோா் கொண்ட குழுவினா் ஆய்வு செய்தனா்.

பள்ளித் தலைமை ஆசிரியை வெ.செல்வி, ஆசிரியா்கள் லலிதா, மோகன், வெங்கடேசன், குணசுந்தரி, பூா்ணிமா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT