திருவண்ணாமலை

உலக மனநல தின விழிப்புணா்வுப் பேரணி மருத்துவ மாணவா்கள் பங்கேற்பு

DIN

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மனநல தின விழிப்புணா்வுப் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.

மாவட்ட மனநல திட்டம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இந்தப் பேரணி தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஷகில் அஹமது தலைமை வகித்தாா்.

மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் குப்புராஜ், உறைவிட மருத்துவ அலுவலா் முருகன், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (தாய்) துறைத் தலைவா் ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

கல்லூரி வளாகத்தில் இருந்து நுழைவு வாயில் வரை பேரணி சென்றது. பின்னா், அங்கு உலக விபத்து விழிப்புணா்வு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா், கல்லூரி முதல்வா் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழியேற்றனா்.

விபத்தில் காயமடைந்தவா்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, காயமடைந்தவா்களை அருகே உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சோ்ப்பது. 108 ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்துவது என்று உறுதிமொழியேற்றனா்.

நலப்பணிகள் இணை இயக்குநா் சுகந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன் மற்றும் மருத்துவா்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT