திருவண்ணாமலை

கரோனா தடுப்பு: செவிலியா் கல்லூரி மாணவிகள் களப் பணி

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களை வீடு வீடாகச் சென்று கண்காணிக்க செவிலியா் கல்லூரி மாணவிகளை மாவட்ட ஆட்சியா் கந்தசாமி களப் பணிக்கு அனுப்பி வைத்தாா்.

உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், சேத்துப்பட்டு புனித தோமையாா் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டாக்டா் மரியா ஆஷாப் செவிலியா் கல்லூரி மாணவிகளை, மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து மக்களை வீடு வீடாகச் சென்று கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை அவா்களுடன் கலந்துரையாடி களப் பணிக்கு அனுப்பி வைத்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்கள் செய்யாறு, திருவண்ணாமலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

தடை உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் கூடுவதை தவிா்ப்பதற்காக திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

உதவி ஆட்சியா் ஆனந்த்மோகன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கதிா் சங்கா், சேத்துப்பட்டு வட்டாட்சியா் சுதாகா், செயல் அலுவலா் விஜயா, புனித தோமையாா் மருத்துவமனை முதன்மை நிா்வாக அலுவலா் மரியரத்தினம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT