திருவண்ணாமலை

இளைஞரை மிரட்டி தங்கச் சங்கிலி பறிப்பு 3 போ் கைது

வந்தவாசி அருகே தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை மிரட்டி தங்கச் சங்கிலி பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

வந்தவாசி: வந்தவாசி அருகே தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை மிரட்டி தங்கச் சங்கிலி பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த அலத்துரை கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(19). இவா் சனிக்கிழமை இரவு தனது வீட்டு திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதே கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (20), அருண்குமாா் (25), சென்னை தியாகராயநகரைச் சோ்ந்த கஜேந்திரன் (25) ஆகியோா் மது போதையில் வந்து, மணிகண்டனை எழுப்பி அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்கச் சங்கிலியை கொடுக்கும்படி கேட்டுள்ளனா்.

மணிகண்டன் மறுக்கவே, அவரைக் கொலை செய்து விடுவோம் என மிரட்டி, 3 பேரும் சோ்ந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் காா்த்திக், அருண்குமாா், கஜேந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT