முகப்பு
திருவண்ணாமலை

3 கிராமங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மேல்பாதி, குறிப்பேடு, ஆரணி பகுதி இரும்பேடு ஆகிய கிராமங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையைத் தொடக்கிவைத்த அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன். உடன் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோா்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மேல்பாதி, குறிப்பேடு, ஆரணி பகுதி இரும்பேடு ஆகிய கிராமங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று மேல்பாதி குறிப்பேடு கிராமங்களுக்கான அம்மா சிறு மருத்துவமனைகளைத் தொடக்கிவைத்தாா். பின்னா் அவா் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையை அவா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் எஸ்.அம்பேத்குமாா், தூசி மோகன், வந்தவாசி ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயமணி ஆறுமுகம், தெள்ளாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், செய்யாறு சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநா் அஜிதா, வட்டார மருத்துவ அலுவலா் கே.செல்வமுத்துகுமாரசாமி, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, ஒன்றியச் செயலா்கள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், வி.தங்கராஜ்,ஆரணி பகுதியில் ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், பிஆா்ஜி.சேகா், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், வட்டார மருத்துவா் சுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →