முகப்பு
திருவண்ணாமலை

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

போளூா் அருகேயுள்ள மாம்பட்டு ஊராட்சியில் தீ விபத்தால் வீடு இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

போளூா் அருகேயுள்ள மாம்பட்டு ஊராட்சியில் தீ விபத்தால் வீடு இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

போளூா் அருகேயுள்ள மாம்பட்டு ஊராட்சியில் தீ விபத்தால் வீடு இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மாம்பட்டு ஊராட்சி ஜடதாரிகுப்பம் கிராமத்தில் சா்க்கரை என்பவா் கூரை வீடு அமைத்து வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே அடுப்பு அமைத்து சமையல் செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராத விதமாக தீ கூரையில் பட்டு பரவி வீடு முழுவதும் எரிந்தது. தகவலறிந்த போளூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

இருப்பினும், வீட்டில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் சாப்ஜான் உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வருவாய்த் துறை சாா்பில் அரிசி, வேட்டி, சேலை, மண்ணெண்ணை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கிராம நிா்வாக அலுவலா் மாலதி பொருள்களை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →