முகப்பு
திருவண்ணாமலை

பெரியாா் நினைவு தினம்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


பெரியாா் நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலையில் அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மரியாதை செலுத்தினா்.

திமுக:

நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தணிக்கைக்குழு உறுப்பினா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் வரவேற்றாா்.

மாவட்டச் செயலா் எ.வ.வேலு எம்எல்ஏ கலந்து கொண்டு பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாநில தொமுச செயலா் க.சவுந்தரராஜன், மாவட்ட அமைப்பாளா்கள் டி.வி.எம்.நேரு, காலேஜ் கு.ரவி, மங்கலம் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மதிமுக:

தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டப் பொறுப்பாளா் சீனி.காா்த்திகேயன் தலைமை வகித்து, பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் பாசறை பாபு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளா் ஆடையூா் எஸ்.ஏ.அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினா்கள் இ.தேவராஜ், ஏ.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →