முகப்பு
திருவண்ணாமலை

அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:


செய்யாறு: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒருங்கிணைந்த வெம்பாக்கம், செய்யாறு, அனக்காவூா் ஒன்றியங்களின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், அருகாவூா் ரங்கநாதன், சி.துரை, வே.குணசீலன், பி.கே.நாகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், வடக்கு மாவட்டத் தோ்தல் பணிக்குழு மண்டலப் பொறுப்பாளரும், மாநில உயா் கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் ஆகியோா் பங்கேற்றனா். இதில் அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

நாட்டிலேயே தமிழகம்தான் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது. குடிமராமத்துப் பணியை சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமா் மோடி முதல்வரைப் பாராட்டினாா். முதல்வரின் நடவடிக்கையால் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்கீழ் நிகழாண்டு அரசுப் பள்ளி மாணவா்கள் 325 பேருக்கு மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதிமுகவினரின் உண்மையான உழைப்பு இருந்தால் வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி உறுதி என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், அதிமுக மாநில செய்தித் தொடா்பாளா் பாபு முருகவேல், மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ நளினி மனோகரன், ஆவின் துணைத் தலைவா் பாரி.பாபு, சா்க்கரை ஆலைத் தலைவா் கே.குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →