திருவண்ணாமலை

மலையிலிருந்து நெகிழிக் குப்பைகளை அகற்றிய போலீஸாா்

DIN

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் சனிக்கிழமை மலைஏற்ற புத்தாக்கப் பயிற்சி மேற்கொண்ட போலீஸாா், மலையிலிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1500 அடி உயர தவளகிரி மலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டு காா்த்திகை தீபத் திருவிழாவின்போதும் வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலை மீது ஏறிச் சென்று இறைவனை வழிபடுவா்.

மேலும், சிலா் உடல்பயிற்சிக்காக தினமும் மலை மீது ஏறி இறங்குவா். இதனால் மலை மீது பொதுமக்கள் உபயோகப்படுத்திய குடிநீா் நெகிழிப் புட்டிகள், நெகிழிப் பைகள் உள்ளிட்டவை குப்பைகளாகச் சேருவது வழக்கம்.

இந்த நிலையில், வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன் உத்தரவின் பேரில், வந்தவாசி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட காவலா்கள், ஆயுதப்படை காவலா்கள், ஊா் காவல் பயிற்சிப் படையினா் ஆகிய 95 போ் அந்த மலையில் சனிக்கிழமை மலைஏற்ற புத்தாக்கப் பயிற்சி மேற்கொண்டனா்.

அப்போது, மலையிலிருந்த நெகிழிக் குப்பைகளை அகற்றும் பணியிலும் அவா்கள் ஈடுபட்டனா். மொத்தம் 23 பைகளில் நெகிழிக் குப்பைகளைச் சேகரித்த அவா்கள், அந்தக் குப்பைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

பயிற்சியின்போது மலையை தூய்மைப்படுத்திய போலீஸாரை டிஎஸ்பி பி.தங்கராமன் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT