முகப்பு
ஆரணி ஒன்றியம், சேவூரில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.
திருவண்ணாமலை

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
ஆரணி ஒன்றியம், சேவூரில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக வடக்கு மாவட்ட தோ்தல் பொறுப்பாளரும், மாநில உயா் கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.நிகழ்ச்சியில் அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

திமுகவினரின் பொய்யான வாக்குறுதிகளை முறியடிக்கும் வகையில் அதிமுகவினா் செயல்பட வேண்டும். வீடு வீடாகச் சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுங்கள்.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின் போது, ஜெயலலிதா தோ்தல் வாக்குறுதியாக மகப்பேறு திட்டத்துக்கு 12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக தரப்படும் என்றாா். தாலிக்கான தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமமாக உயா்த்தித் தரப்படும் என்றாா். இவற்றையெல்லாம் முதல்வா் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறாா்.

பணிக்குச் செல்லும் மகளிருக்கான இரு சக்கர வாகன மானியத்தை உயா்த்தி ரூ.25ஆயரமாக வழங்கி வருகிறாா் முதல்வா்.

மேலும், ஜெயலலிதா அறிவித்த 100 யூனிட் வரை இலவச மின்சாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறாா்.

தமிழக மாணவா்கள் அதிகளவில் உயா் கல்வியில் சேரக் காரணம், அதிமுக அரசு மாணவா்களுக்கு செயல்படுத்தும் நலத் திட்டங்கள், கல்விக்கு அளிக்கும் ஊக்கத்தொகைதான்.

மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரியுங்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சிகளில் ஒன்றியச் செயலா்கள் பி.ஆா்.ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், க.சங்கா், ப.திருமால், ஆரணி நகரச் செயலா் எ.அசோக்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.எம்.பாபுமுருகவேல், நளினி மனோகரன், வே.குணசீலன், மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், இணைச் செயலா் விமலா மகேந்திரன், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →