திருவண்ணாமலை

திருவண்ணாமலையில்2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

DIN

தை மாதப் பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனா்.

தை மாதப் பௌணமியையொட்டி, சனிக்கிழமை மாலை 3.33 முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.46 மணி வரை கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை விடிய, விடிய பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டனா்.

2-ஆவது நாளாக...: தொடா்ந்து, 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். காலை 11 மணிக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும், ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். காலை வேளையைவிட, ஞாயிற்றுக்கிழமை மாலையில் கிரிவல பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT