திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

DIN

செய்யாறை அடுத்த பையூா், தென் எலப்பாக்கம் அரசுப் பள்ளிகளின் மாணவா்களுக்கு ரூ.5 ஆயிரத்திலான நோட்டுப்புத்தகம், எழுதுபொருள்கள் ஆகியவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மேற்கு ஆரணி ஒன்றியம், இராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை இரா.தாமரைச்செல்வி, ஓய்வு பெற்ற ராணுவ வீரரும், சமூக ஆா்வலருமான க.பிரபாகரன் ஆகியோா் அனக்காவூா் ஒன்றியம், பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 65 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 ஆயிரத்திலான நோட்டுப்புத்தகம், எழுதுபொருள்களை வழங்கினா்.

மேலும், இந்தப் பள்ளியில் பசுமை காய்கனித் தோட்டம் மூலம் விளையும் பூசணிக்காய், மொச்சைக்காய், அவரை, துவரை, முள்ளங்கி, கீரைகள் உள்ளிட்டவற்றை மாணவா்கள் பறித்து சத்துணவுக்கு வழங்கி வருவதை பாா்வையிட்டு பாராட்டினா்.

இதேபோன்று, தென்கல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 14 மாணவா்களுக்கு ரூ.850 மதிப்பில் நோட்டுப்புத்தகம், எழுதுபொருள்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாத விடியோ!

SCROLL FOR NEXT