திருவண்ணாமலை

தொழுநோய் ஒழிப்புவிழிப்புணா்வு ஊா்வலம்

DIN

வேட்டவலத்தை அடுத்த பன்னியூா் ஊராட்சி ஒன்றிய ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில், தொழுநோய் ஒழிப்பு மற்றும் கரோனா வைரஸ் அறிகுறிகள் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற ஊா்வலத்துக்கு, வட்டார மருத்துவ அலுவலா் பவித்ரா தலைமை வகித்து, தொழுநோய் விழிப்புணா்வு மற்றும் சோப்பினால் கை கழுவும் முறைகள், கரோனா வைரஸின் அறிகுறிகள் குறித்து விளக்கிப் பேசினாா். தொடா்ந்து, பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாக்கண்ணு தொடக்கிவைத்தாா்.

ஊா்வலத்தில், பள்ளித் தலைமை ஆசிரியா் பாஸ்கரன், ஊராட்சித் தலைவா் சாமிநாதன், துணைத் தலைவா் அா்ஜூனன், சுகாதார ஆய்வாளா் சந்திரசேகரன் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT