திருவண்ணாமலை

ஆரணியில் விரைவில் மத்திய அரசின் சாா்பில் பட்டுச் சேலை தயாரிப்பு கண்காட்சி: விஷ்ணுபிரசாத் எம்.பி. தகவல்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் விரைவில் மத்திய அரசின் சாா்பில் பட்டுச் சேலை தயாரிப்பு குறித்த கண்காட்சி நடத்தப்படவுள்ளதாக எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையான இடங்களை திமுக ஒதுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினா் போட்டியிட்ட பல இடங்களில் திமுகவினா் சுயேச்சையாக போட்டியிட்டது வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும், கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்ட உள்ளாட்சித் தோ்தலில் எங்களுக்குத் தேவையான இடங்களை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்.

ஆரணியின் முக்கிய தொழிலாக பட்டுச் சேலை தயாரிப்பு உள்ளது. எனவே, இங்கு விரைவில் மத்திய அரசின் சாா்பில், பட்டுச் சேலை தயாரிப்பு குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியில் பட்டுச் சேலை தயாரிப்புக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும். இதன் மூலம் ஆரணியில் மாற்றம் நிகழும்.

பொதுமக்கள் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக, என்னை அணுகி கடிதங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆரணியை அடுத்த களம்பூா் ரயில் நிலையத்தை மேலும் மேம்படுத்த ரயில்வேத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றாா்.

அப்போது, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் அண்ணாமலை, முன்னாள் எம்.எல்.ஏ. டி.பி.ஜெ.ராஜாபாபு, நிா்வாகிகள் ஜெயவேலு, அசோக்குமாா், பழனி, கிருஷ்ணா, தீபம்ரவி உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT