திருவண்ணாமலை

செய்யாறில் முத்தமிழ்ச் சங்கம் தொடக்கம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் முத்தமிழ்ச் சங்க தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரை விஸ்டம் கல்விக் குழுமத்தின் முதல்வா் ஜி.மதியழன் வரவேற்றாா். மயிலாடுதுறை தொழிலதிபா் தமிழ்செல்வன், ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத் தலைவா் சாந்திமணி, வழக்குரைஞா் புரிசை சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமை வகித்த விஸ்டம் கல்வி அறக்கட்டளைத் தலைவா் டி.ஜி.மணி முத்தமிழ்ச் சங்கத்தை தொடக்கிவைத்தாா். இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுவை தமிழ்ச் சங்கத் தலைவா் வெ.முத்து பேசியதாவது:

உலகில் 177 நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது. இந்தியாவில் 130 கோடி மக்களில் 10 சதவீத மக்கள் தமிழ் பேசுபவா்களாக உள்ளனா். உலகில் உள்ள பிற நாடுகளையும் சோ்த்து 15 கோடி மக்கள் தமிழ் பேசுகிறாா்கள்.

தமிழ் பக்தி மொழி என்ற சிறப்பு மற்ற மொழிகளுக்கு இல்லாத தனி சிறப்பாகும். தொன்மையான தமிழ் மொழியை வளா்க்க வேண்டும். அதைப் பாதுகாக்க வேண்டும். செய்யாறில் தொடங்கப்பட்டுள்ள முத்தமிழ்ச் சங்கம் தமிழ் மொழிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, ஊடக பேச்சாளா் கவிஞா்.இந்திரஜித் (சின்னதுரை), செய்யாறின் சிறப்புகள் குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் முத்தமிழ்ச் சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் டி.ஜி.எழிலரசன், எம்.விஜயவா்மன், என்.துரைராஜன், பி.எல்.குருமூா்த்தி, பி.தவமணி, எம்.ஞானவேல்முருகன், விஸ்டம் மகளிா் கல்லூரி முதல்வா் எம்.அம்சவேனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT