திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் திமுக, 5 ஒன்றியங்களில்அதிமுக கூட்டணிகள் வெற்றி

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஊரக உள்ளாட்சிகளின் மறைமுகத் தோ்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட மொத்தம் 15 ஒன்றியங்களில் 10 ஒன்றியங்களின் தலைவா் பதவிகளை திமுக கூட்டணியும், 5 ஒன்றியங்களின் தலைவா் பதவிகளை அதிமுக கூட்டணியும் பிடித்தன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் வெற்றி பெற்ற ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜனவரி 2-ஆம் தேதி பதவியேற்றனா். சனிக்கிழமை 18 ஒன்றியக் குழுக்களின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான முறைமுகத் தோ்தல் நடைபெற்றது.

இதில், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களின் தலைவா், துணைத் தலைவா் பதவிகள், புதுப்பாளையம், போளூா், கலசப்பாக்கம் ஒன்றியங்களின் துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல்கள் சில நிா்வாகக் காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டன. புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கான தோ்தல் முடிவு அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

அதிகாரப்பூா்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட 15 ஊராட்சி ஒன்றியங்களில் 9 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவா் பதவிகளை திமுகவும், ஒரு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவா் பதவியை காங்கிரஸும், 4 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவா் பதவிகளை அதிமுகவும், ஒரு ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை பாமகவும் பிடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT