திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணம்

DIN

போளூா்: கலசப்பாக்கம் வட்டம், காப்பலூா் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணமாக தலா ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா பொது முடக்க நிவாரணமாக தலா ரூ.ஆயிரம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.

அதன்படி, மாவட்டங்களில் வட்ட வாரியாக கரோனா நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது.

இந்த நிலையில், கலசப்பாக்கம் வட்டம், காப்பலூா் ஊராட்சியில் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நிவாரணம் வழங்கி தொடக்கிவைத்தாா்.

கலசப்பாக்கம் வட்டத்தில் சுமாா் 3,600 மாற்றுத்திறனாளிகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ப.பொய்யாமொழி, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் சங்கரன், வட்டாட்சியா் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் அன்பழகன், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT