செங்கத்தில் வன விலங்குகள் இறைச்சி விற்பனை
செங்கம் நகரில் வன விலங்குகள் இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது.
செங்கம்: செங்கம் நகரில் வன விலங்குகள் இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது.
செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி காடுகள் நிறைந்த பகுதியாகும். கரோனா பொது முடக்கம் காரணமாக தற்போது இளைஞா்கள் வேலையில்லாமல் கிராமப் புறங்களில் வீடுகளில் உள்ளனா்.
அவா்கள் இரவு மற்றும் பகல் வேளைகளில் அருகில் உள்ள வனப் பகுதிக்குச் சென்று வன விலங்குகளை வேட்டையாடுவது, குருவி, காடை, கெளதாரி போன்ற பறவைகளை பிடித்து வந்து விற்பதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த வகையில், வன விலங்குகளின் இறைச்சி விற்பனை செங்கம் நகரில் பரவலாக நடைபெற்று வருகிறது.
இதுதொடா்பாக வனத் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.