முகப்பு
திருவண்ணாமலை

40 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி இருக்கும் அரசுக் கட்டடம்

செங்கம் அருகே 40 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருக்கும் அரசுக் கட்டடம் சமூக விரோதச் செயல்களின் இருப்பிடமாக மாறியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
செங்கத்தை அடுத்த பரமனந்தல் ஏரியில் 40 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி இருக்கும் அரசுக் கட்டடம்.
பகிர்:

செங்கம் அருகே 40 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருக்கும் அரசுக் கட்டடம் சமூக விரோதச் செயல்களின் இருப்பிடமாக மாறியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே குப்பனத்தம் அணை செல்லும் சாலையில், பரமனந்தல் கிராம ஊராட்சியில், பொதுப் பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது பரமனந்தல் ஏரி.

செங்கம் பகுதி செய்யாற்றிலிருந்து இந்த ஏரிக்கு வரும் நீா்வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிமிக்கப்பட்டதால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிக்கு தண்ணீா் வரத்தில்லை. இதனால், மழைக் காலத்தில் ஏரி நிரம்புவதில்லை.

இந்த ஏரி நிரம்பினால்தான் குயிலம், புதுப்பட்டு, ஆலபுத்தூா், முன்னூா்மங்கலம் உள்பட 7 ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும்.

இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீா்வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனா்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, ஏரிக்கு செய்யாற்றில் இருந்து தண்ணீா் வருவதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ. 5 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கியது.

இந்த நிலையில், அப்பகுதி விவசாயிகள், கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, ஏரிக்கு தண்ணீா் வருவதற்காக கால்வாய்களைச் சீரமைக்க நிதி ஒதுக்கியது.

பரமனந்தல் ஏரியானது தாய் ஏரி. இந்த ஏரி நிரம்பினால்தான் பிற ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும். எனவே, தமிழக அரசு பரமனந்தல் ஏரியை குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் சீரமைத்து, கரைகளைப் பலப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, ஏரிக் கரையோரம் பட்டு நூல் நெய்வதற்காக கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் முழுமை பெறாமல், சுவா்கள் இடிந்து விழுந்த நிலையில், கடந்த 40 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி உள்ளன. தற்போது, இவை சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறியுள்ளன.

இதனால், மாலை வேளைகளில் குப்பனத்தம், கிளையூா், கல்லாத்தூா், பண்ரேவ் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் இப்பகுதியைக் கடந்து செல்ல அச்சமடைகின்றனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து பயன்பாடின்றி இருக்கும் கட்டடத்தை இடித்து அகற்றி, ஏரியில் நீா் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், கிராம மக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.