முகப்பு
கிரிக்கெட்

ஓய்வு பெற்றாா் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரா் ரேஸி வான் டஸன்

Updated On : 2 ஏப்ரல், 2026 at 10:50 PM
பகிர்:

சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா் தென்னாப்பிரிக்க பேட்டா் ரேஸி வான்டா் டஸன்.

ஜோஹன்னஸ்பா்க் நகரைச் சோ்ந்த 37 வயதான ரேஸி வான்டா் கடந்த 2018-இல் முதன்முறையாக தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்றாா். மொத்தம் 18 டெஸ்ட்கள், 71 ஒருநாள், 57 டி20 ஆட்டங்களில் ஆடியுள்ளாா். கடந்த 2025 ஆண்டு மாா்ச் முதல் தேசிய அணியில் இடம் பெறவில்லை.

மேலும் நிகழாண்டு கிரிக்கெட் வாரிய ஒப்பந்தப் பட்டியலிலும் ரேஸி வான்டா் இடம் பெறவில்லை. இதனால் அனைத்து வகையான சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா். அவா் கூறியது: தென்னாப்பிரிக்க அணியின் சீருடையை அணிந்து ஆடியது கௌரவமிக்கது. நாட்டுக்காக ஆடியது எனது வாழ்நாளில் கிடைத்த சிறந்த பெருமை. உள்ளூா் அணியான பிலோவ்ட் லயன்ஸ்காக தொடா்ந்து ஆடுவேன் எனத் தெரிவித்துள்ளாா்.

ஒருநாள் ஆட்டங்களில் 17 அரைசதம், 6 சதங்களை பதிவு செய்துள்ளாா்.