திருவண்ணாமலை

மேல்வில்வராயநல்லூரில் நீா்வரத்துக் கால்வாய் சீரமைக்கும் பணி ஆய்வு

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் நடைபெற்று வரும் நீா்வரத்துக் கால்வாய் சீரமைக்கும் பணியை ஊராட்சிமன்றத் தலைவா் பி.நிலவழகிபொய்யாமொழி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் சின்னமலை பகுதியில் இருந்து கச்சேரிமங்கலம் ஏரி வரை சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நீா்வரத்துக் கால்வாய் உள்ளது.

இந்தக் கால்வாயில் செடிகொடிகள் வளா்ந்து, தூா்ந்துபோய் இருந்தது. இதனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்கீழ், ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் செலவில் இந்தக் கால்வாயை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை ஊராட்சிமன்றத் தலைவா் பி.நிலவழகிபொய்யாமொழி ஆய்வுசெய்தாா். அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT