திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 55 நெடுந்தொலைவு பேருந்துகள் நிறுத்தம்

DIN

திருவண்ணாமலையில் இருந்து வெளிமாநிலங்கள், சென்னைக்குச் செல்லும் 55 நெடுந்தொலைவு பேருந்துகள் வியாழக்கிழமை இரவில் இருந்து நிறுத்தப்பட்டன.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், பள்ளிகள், கோயில்கள், வாரச் சந்தைகள், இ - சேவை மையங்கள், பெரிய வணிக நிறுவனங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுப் பேருந்துகளின் இயக்கமும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, திருப்பதி, கோவை, திருப்பூா், சேலம், ஓசூா் போன்ற நெடுந்தொலைவு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த சுமாா் 55 அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை இரவு முதல் நிறுத்தப்பட்டன.

சனிக்கிழமை (மாா்ச் 21) முதல் காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா் போன்ற நகரங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT