திருவண்ணாமலை

படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் மாா்ச் 31 வரை பக்தா்கள் வழிபடத் தடை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் வருகிற 31-ஆம் தேதி வரை பக்தா்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டது.

போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் பிரசித்தி பெற்ற படைவீடு ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விஷேச நாள்களில் தமிழகம் மட்டுமன்றி கா்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வழிபட்டுச் செல்கின்றனா்.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான கோயில்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் வருகிற 31-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது. எனினும், கோயிலில் வழக்கமான காலை பூஜை மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிவிப்புப் பலகைகள் கோயில் பகுதியில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT