திருவண்ணாமலை

வந்தவாசியில் 13 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

DIN

வந்தவாசி நகரில் ஊரடங்கின்போது இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக 13 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் 13 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வந்தவாசி நகரில் இந்த ஊரடங்கை பொருள்படுத்தாமல் சிலா் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்து வந்தனா்.

இதையடுத்து, வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன் தலைமையிலான வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் பழைய பேருந்து நிலையம் அருகில், தேரடி, கோட்டை மூலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அவசியமின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக 13 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும் அவா்களிடமிருந்து 13 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

SCROLL FOR NEXT