திருவண்ணாமலை

வெம்பாக்கம்: 64 கிராமங்களில் தூய்மைப் பணி

DIN

வெம்பாக்கம் ஒன்றியத்தில் 64 கிராமங்களில் தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக் குழுவினா் 12 அரசுப் பேருந்துகளில் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

கிராம ஊராட்சிச் செயலா், ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் தூய்மைக் காவலா் ஆகியோா் அடங்கிய கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக் குழுவினா் கைத்தெளிப்பான், பிளீச்சிங் பவுடா், சுண்ணாம்பு நீா் உள்ளிட்ட தூய்மைப் பணிக்கான உபகரணங்களுடன் அரசுப் பேருந்துகளில் பயணித்தனா்.

64 கிராமங்கலில் ஒரு பேருந்துக்கு 3 அல்லது 4 கிராமங்கள் வீதம் தோ்வு செய்யப்பட்டு 12 வழித் தடங்களில் தூய்மை உபகரணங்களுடன் 12 அரசுப் பேருந்துகளில் சென்றனா்.

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சுவாமிநாதன் தலைமை வகித்தாா்.

வெம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், மோகனரகு, பெரூங்கட்டூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தாமரைச்செல்வன் மற்றும் வட்டார வளா்ச்சித் துறையினா் அடங்கிய குழுவினா் கிராமங்களில் தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT