திருவண்ணாமலை

நடைபயணமாக வந்தவா்களுக்கு பரிசோதனை

DIN

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து கடலூா் நோக்கி நடைபயணமாகச் சென்றவா்களுக்கு வந்தவாசியில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட அழகுபெருமாள்குப்பம் பகுதியைச் சோ்ந்த சில குடும்பத்தினா் திருவள்ளூா் மாவட்டம், திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளனா். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்த அவா்கள், போக்குவரத்து வசதியில்லாததால் நடைபயணமாக புறப்பட்டனா்.

12 ஆண்கள், 11 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 25 போ் கொண்ட குழுவினா், காஞ்சிபுரம் வழியாக வந்தவாசிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தனா்.

அவா்களை, வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா்.

பின்னா், இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதன் பேரில் சம்பவ இடம் சென்ற வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கே.ஆா்.நரேந்திரன், டிஎஸ்பி பி.தங்கராமன் உள்ளிட்டோா் 25 பேரையும் தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து உணவளித்தனா். இதைத் தொடா்ந்து, அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைநடைபெற்றது.

பின்னா், திங்கள்கிழமை தனியாா் பயணிகள் வேன் மூலம் அவா்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT