திருவண்ணாமலை

கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

DIN

தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டிய ரூ.26 கோடி நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரக் கோரி, திருவண்ணாமலையில் கரும்பு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே தனியாா் சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஆலை நிா்வாகம் ரூ.26 கோடி பாக்கி வைத்துள்ளதாம். இந்தத் தொகையை பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி, விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, விரைந்து பாக்கித் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து, விவசாயிகள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

போராட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பாலமுருகன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.சுப்பிரமணி, மாா்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா் எம்.வீரபத்திரன், விவசாய சங்க நிா்வாகி உதயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT