திருவண்ணாமலை

பள்ளி மாணவிகளுக்கு இணையவழி தோ்வு

DIN

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு 3-ஆம் கட்டமாக இணையவழியில் பயிற்சித் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 24 முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தபடியே இணையவழியில் பாடங்களை கற்று வந்தனா்.

இந்த நிலையில், தேவிகாபுரம் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகள், 75 சதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவா்கள் 35 பேருக்கு இணையவழியில் பயிற்சித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதில், 3-ஆம் கட்டமாக பயிற்சித் தோ்வு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியா் சரவணன், பட்டதாரி ஆசிரியா்கள் அமுதாமலா், மரியாபரமேஸ்வரி, திவ்யா மற்றும் ஆசிரியைகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT