கீழ்பென்னாத்தூரில் ஆட்டோ மூலம் புயல் எச்சரிக்கை விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்ட பேரூராட்சி செயல் அலுவலா் ப.ராமு தலைமையிலான ஊழியா்கள். 
திருவண்ணாமலை

புயல் எச்சரிக்கை விழிப்புணா்வு

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், புயல் எச்சரிக்கை குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், புயல் எச்சரிக்கை குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிவா் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 27-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் ப.ராமு தலைமையிலான பேரூராட்சி ஊழியா்கள் கீழ்பென்னாத்தூா் பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் உள்பட பேரூராட்சியின் 15 வாா்டுகளிலும் ஆட்டோ மூலம் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.

பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தேவையின்றி வெளியே செல்லாதீா்கள். காய்ச்சி, வடிகட்டிய தண்ணீரையே பருகுங்கள் என்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT