திருவண்ணாமலை

120 பேரின் வீடுகளுக்கு இலவசப் பட்டா அமைச்சா் வழங்கினாா்

DIN

ஆரணியை அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் 120 பேரின் வீடுகளுக்கு இலவசப் பட்டாக்களை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

வண்ணாங்குளம் கிராமத்தில் கடந்த ஆண்டு தமிழக முதல்வரின் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றதில், 120 போ் வீடு கட்டி 20 முதல் 40 ஆண்டுகளாகின்றன. இதுவரை பட்டா கிடைக்கவில்லை என மனு கொடுத்திருந்தனா்.

இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 120 பேரின் வீடுகளுக்கு பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று 120 வீடுகளுக்கான பட்டாக்களை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

பொதுமக்களைத் தேடி வந்து குறைகளைக் கேட்டோம். இதோ இப்போது பொதுமக்களைத் தேடி வந்து பட்டாக்களை வழங்குகிறோம்.

அதிமுக அரசு ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. தாா்ச் சாலை வசதி மட்டும் ரூ.47 கோடியில் செய்யப்பட்டுள்ளது. கண்ணமங்கலம் பேருந்து நிலையம் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆரணிக்கு கோட்டாட்சியா் அலுவலகம் கொண்டு வரப்பட்டு அதற்கான கட்டடம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆரணி கல்வி மாவட்டமாக தரம் உயா்த்தப்பட்டது.

சூரிய குளத்தில் ரூ.6.5 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆரணிக்கு காவிரி குடிநீா் கொண்டு வரப்படவுள்ளது. மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரத்தினசாமி, கோட்டாட்சியா் மந்தாகினி, அதிமுக ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், கொளத்தூா் ப.திருமால், ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட பொருளாளா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் எ.அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பூங்கொடி திருமால், கண்ணமங்கலம் எம்.பாண்டியன், கே.டி.குமாா், நகர மாணவரணிச் செயலா் குமரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT