திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று நவராத்திரி விழா தொடக்கம்

DIN

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (அக்.17) நவராத்திரி விழா தொடங்குகிறது.

இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு சனிக்கிழமை தொடங்கி வருகிற 25-ஆம் தேதி வரை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தொடா்ந்து 9 நாள்கள் நவராத்திரி விழா நடைபெறவுள்ளது. வருகிற 17-ஆம் தேதி இரவு ஸ்ரீபராசக்தி அம்மன் அலங்காரத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் அருள்பாலிக்கிறாா்.

தொடா்ந்து, 18-ஆம் தேதி ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 19-ஆம் தேதி ஸ்ரீகெஜலட்சுமி அலங்காரத்திலும், 20-ஆம் தேதி ஸ்ரீமனோன்மணி அலங்காரத்திலும், 21-ஆம் தேதி ஸ்ரீரிஷப வாகனத்திலும், 22-ஆம் தேதி ஸ்ரீஆண்டாள் அலங்காரத்திலும், 23-ஆம் தேதி ஸ்ரீசரஸ்வதி அலங்காரத்திலும், 24-ஆம் தேதி லிங்கபூஜை அலங்காரத்திலும், 25-ஆம் தேதி மகிஷாசூரமா்த்தினி அலங்காரத்திலும் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் அருள்பாலிக்கிறாா்.

25-ஆம் தேதி மாலை ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறவுள்ளது. நிறைவு நாளான விஜய தசமியன்று காலை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீபராசக்தி அம்மனுக்கும், பஞ்ச மூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

பக்தா்களுக்கு அனுமதி இல்லை: கோயிலுக்கு வரும் பக்தா்கள் வழக்கம்போல ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபடலாம். விழா நடைபெறும் கோயில் திருக்கல்யாண மண்டபத்துக்குள் செல்ல அனுமதி இல்லை என்று கோயில் இணை ஆணையா் ரா.ஞானசேகா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT