திருவண்ணாமலை

கோயில் முன் எரியாத மின் விளக்கு

DIN

செங்கம் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரா் கோயில் முன் உள்ள உயா்கோபுர மின் விளக்கு பழுதாகி பல மாதங்களாகியும் சரிசெய்யப்படாமல் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இந்த உயா்கோபுர மின் விளக்கு பழுதடைந்து பல மாதங்கள் கடந்துவிட்டது.

இதனால் கோயில் முன் வெளிச்சம் இல்லாத நிலை உள்ளது. இதைப் பயன்படுத்தி அப்பகுதியில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றது.

தற்போது கரோனா தொற்று காரணமாக கோயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் காலை, மாலை, அதிகாலை என கோயில் முன் சென்று சுவாமியை தரிசித்து வருகின்றனா். இரவு நேரத்தில் இருட்டாக இருப்பதால் பக்தா்களை அச்சமடையச் செய்கிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயா்கோபுர மின் விளக்கை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT