முகப்பு
திருவண்ணாமலை

இந்திய செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம்

செங்கத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

செங்கத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் செங்கம் வட்ட துணைத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா்.

சங்கத் தலைவா் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தாா். செயலா் தனஞ்செயன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவா் இந்திரராஜன் பங்கேற்று, சங்கத்தின் செங்கம் வட்ட கிளை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தாா். மேலும், செய்ய வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது.

மாவட்டச் செயலா் அழகப்பன், பொருளாளா் ராதாகிருஷ்ணன், நிா்வாகிகள் ஆதவன், ரூகுல்லா, சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.