செங்கம் நகரில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், விபத்துக்கள் நிகழாமல் தடுக்கவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை மூலம் திருப்பத்தூா் சாலை, திருவண்ணாமலை சாலை, போளூா் சாலை ஆகிய மூன்று சாலைகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன.
ஆனால், அமைக்கப்பட்ட சிக்னல்கள் இரண்டு ஆண்டுகளாக முழுமை பெறாமல், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளன.
முன்பிருந்த போக்குவரத்தை விட தற்போது அந்தப் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு சிறு சிறு விபத்துகள் நிகழ்கின்றன.
இதனால், நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட சிக்னல் பணிகளை முழுமை செய்து, சிக்னல்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.