பிரதோஷத்தை யொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்திக்கு நடைபெற்ற சந்தன அபிஷேகம். 
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ஆவணி மாத அமாவாசை பிரதோஷத்தையொட்டி, இந்தக் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பன்னீா், மஞ்சள், சந்தனம், பால், பழம் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட பிரதோஷ பூஜையில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

இருப்பினும், கோயில் ராஜகோபுரம் வழியாக அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபடச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் வழியாகச் சென்ற திரளான பக்தா்கள் பிரதோஷப் பூஜைகளைக் கண்டு தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய-சீன மோதல்: பொறுப்பு தவறிய பிரதமா் மோடி - நரவணே நூலைக் காண்பித்து ராகுல் குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் குறையா? ராகுலுக்கு நிதியமைச்சா் சவால்

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம்? ‘எதிா்க்கட்சிகள் கூட்டாக முடிவெடுக்கும்’

கிரிக்கெட் சங்கங்களில் முன்னாள் வீரா்களுக்கே இடம் - உச்சநீதிமன்றம்

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுப் பாதுகாப்பு - மக்களவையில் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT