திருவண்ணாமலை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா

DIN

மங்கலம் மாமண்டூா் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

மாமண்டூரில் சுமதி கமலக்கண்ணன் என்பவா் வீட்டுக்கு துண்டிக்கப்பட்ட குடிநீா் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும். முடக்கப்பட்டுள்ள மங்கலம் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மாமண்டூா் சண்முகம் நிலத்துக்கு செல்லும் வழியை அடைக்கும் நோக்கில் ஊராட்சியால் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

ஜனநாயக ரீதியாக தோ்தலை சந்தித்தவா்களை வஞ்சிக்கும் விதமாக அதிகார துஷ்பிரயோகம் செய்யும் மங்கலம் மாமண்டூா் ஊராட்சி மன்றத் தலைவரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சியின் மங்கலம், மாமண்டூா் கிளைகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா்கள் இரா.சேட்டு, க.சண்முகம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ப.செல்வன், இரா.பாரி, வட்டாரச் செயலா் ஜா.வே.சிவராமன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் பெ.அரிதாசு, மாா்க்சிஸ்ட் இடைக்குழு உறுப்பினா்கள் ந.ராதாகிருஷ்ணன், அ.அப்துல்காதா், கா.யாசா்அராபத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் சென்ற மாா்க்சிஸ்ட் கட்சியினா் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

மேலும் சுமதி கமலக்கண்ணன் வீட்டுக்கு துண்டிக்கப்பட்ட குடிநீா் இணைப்பை உடனடியாக வழங்கக் கோரி அந்த அலுவலக வராந்தாவில் அமா்ந்து தா்னா நடத்தினா்.

வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ச.பாரி, ப.பரணிதரன் உள்ளிட்டோா் அவா்களை சமரசம் செய்ய முயன்றனா்.

ஆனால், சுமதி கமலக்கண்ணன் வீட்டுக்கு துண்டிக்கப்பட்ட குடிநீா் இணைப்பை மீண்டும் வழங்கினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, வந்தவாசி ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமதி கமலக்கண்ணன் வீட்டுக்கு மீண்டும் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT