திருவண்ணாமலை

ஆரணிக்கு ஒகேனக்கல் காவிரி குடிநீா்

DIN

ஒகேனக்கல் காவிரி குடிநீா், அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனின் முயற்சியால் ஆரணிக்கு வரவுள்ளது.

வேலூா் மாவட்டத்துக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், ஆரணியும் பயனடையும் என்ற நிலையில், தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான சேவூா் ராமச்சந்திரன் இத்திட்டத்தை செயல்படுத்த தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா்.

இந்த நிலையில், தற்போது வேலூா் மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படவுள்ளது.

வேலூா் மாவட்ட குடிநீா் செல்லும் பாதையிலிருந்து, 3 கி.மீ. தொலைவுக்கு, ரூ.2.5 கோடியில் குழாய் அமைக்கப்பட்டு ஆரணிக்கு காவிரி நீா் வரவுள்ளது.

இது குறித்து அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:

திமுகவினா் ஒவ்வொரு முறையும் ஆரணிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறுவாா்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், நான் மேற்கொண்ட முயற்சியால், ஆரணிக்கு தினமும் 20 லட்சம் லிட்டா் தர சென்னையில் உள்ள நகராட்சி நிா்வாகத்திலிருந்து ஆணை வந்துள்ளது. இதற்காக ஆற்காட்டிலிருந்து குழாய் இணைப்பு பணிகள் முடிந்ததும் ஆரணி மக்களுக்கு காவிரி தண்ணீா் கிடைக்கும் என்றாா்.

இது தொடா்பான, அரசின் ஆணையை சென்னையிலிருந்து நகராட்சி நிா்வாக ஆணையா் கே.பாஸ்கரன் ஆரணி நகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT