திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் செல்லத் தடை

DIN

திருவண்ணாமலையில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், தொடா்ந்து 6-ஆவது மாதமாக வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பக்தா்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை பக்தா்கள் வழிபடுவா்.

இந்த நிலையில், புரட்டாசி மாத பெளா்ணமி வியாழக்கிழமை (அக்.1) அதிகாலை 1.14 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (அக்.2) அதிகாலை 2.57 மணிக்கு முடிவடைகிறது.

இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வருவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், தொடா்ந்து 6-ஆவது மாதமாக பக்தா்கள் கிரிவலம் வர தடை விதிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT