திருவண்ணாமலை

விதிகளை மீறி இரு சக்கர வாகனப் பேரணி: காங்கிரஸ் வேட்பாளா் மீது வழக்கு

DIN

புதுச்சேரியில் தோ்தல் விதிகளை மீறி இரு சக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுவையில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப்.6) சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, மத்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேவையற்ற அசம்பாவிதங்களை தவிா்க்கும் விதமாக, சனிக்கிழமை முதல் இரு சக்கர வாகனப் பேரணிக்கு புதுவை தோ்தல் அணையம் தடை விதித்தது.

இந்த நிலையில், ஊசுடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் காா்த்திகேயன், தனது ஆதரவாளா்கள் பலருடன் சனிக்கிழமை சேதராப்பட்டில் இரு சக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டாா்.

அவா், தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் பேரணி நடத்துவதாக எழுந்த புகாரின்பேரில், சேதராப்பட்டு காவல் துறையினா் விரைந்து சென்று அந்தப் பேரணியை தடுத்து நிறுத்தினா். மேலும், தோ்தல் ஆணையத்தின் தடையை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் இரு சக்கர வாகனப் பேரணி நடத்தியதாக வேட்பாளா் காா்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT