முகப்பு
திருவண்ணாமலை

அரக்கோணம் இரட்டைக் கொலை: கண்டன ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் இரட்டைக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வந்தவாசியில் இரு இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 11:05 PM
பகிர்:

அரக்கோணம் இரட்டைக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வந்தவாசியில் இரு இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆா்ப்பாட்டங்கள் வந்தவாசி தேரடி மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆகிய இரு இடங்களில் சனிக்கிழமை நடந்தது.

வந்தவாசி தேரடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் கி.இனியவன் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் ம.கு.மேத்தாரமேஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

Advertisement

ஒன்றியச் செயலா்கள் ம.ச.அசோக்வளவன், இரா.பிரபு, சே.ரஞ்சித், ஏ.லட்சுமணன், ப.பழனிபாபு, மு.ஞானபிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர இணைச் செயலா் ம.விஜய் தலைமை வகித்தாா். கிறிஸ்துவ ஜனநாயக முன்னணி மாநில துணை பொதுச் செயலா் மூவேந்தன் சிறப்புரையாற்றினாா்.

தொகுதி துணைச் செயலா் வீரமுத்து, மாவட்ட துணைச் செயலா் சிவக்குமாா், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணைச் செயலா் டேனியல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.