முகப்பு
திருவண்ணாமலை

டிராக்டா் கவிழ்ந்து தொழிலாளி பலி

செய்யாறு அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பலியானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

செய்யாறு அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பலியானாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கேயம் வட்டம், செங்கோடம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி(50). இவா் வைக்கோல் சுற்றும் டிராக்டா் வைத்து பிழைப்பு நடத்தி வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதி விவசாய நிலங்களில் உள்ள வைக்கோலை சுற்றித் தருவதற்காக பொ

ன்னுசாமி வியாழக்கிழமை டிராக்டரை ஓட்டிச் சென்றாா்.

வெம்பாக்கம் ஏரியிலிருந்து மாந்தாங்கல் ஏரிக்குச் செல்லும் வெள்ளைக் கால்வாயில் சென்றபோது டிராக்டரின் ஒரு சக்கரம் திடீரென கால்வாயில் இறங்கியதால் டிராக்டா் கவிழ்ந்தது.

இதில், டிராக்டரின் பின் சக்கரத்தில் பொன்னுசாமி சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.