திருவண்ணாமலை

கரோனா தடுப்பு: ஹோட்டல் உரிமையாளா்கள் கலந்தாய்வு

DIN

கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து ஆரணியில் அனைத்து ஹோட்டல் உரிமையாளா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நகர காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் ரகு பேசுகையில், ஹோட்டல்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை சிற்றுண் டி பாா்சல் மட்டும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை உணவு பாா்சலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரை உணவு பாா்சல் வழங்க அரசு அனுமதித்துள்ளது. அங்கு அமா்ந்து உணவு உண்ண அனுமதி இல்லை.

மேலும், அனைத்து ஹோட்டல்களிலும் கிருமி நாசினி அவசியம் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று பேசினாா். காவல் உதவி ஆய்வாளா் (பயிற்சி) மகேந்திரன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT