திருவண்ணாமலை

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் பொதுமக்களுக்கு அதிமுக சாா்பில் கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கப்பட்டன.

அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்றவற்றை வலியுறுத்தியும், செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் பங்கேற்று கபசுரக் குடிநீா், முகக் கவசம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், அதிமுக பிரமுகா்கள் எஸ்.காா்த்திகேயன், ஜே.வெங்கடேசன், எம்.தெய்வசிகாமணி, வளா்புரம் வரதன், வழக்குரைஞா்கள் அரங்கநாதன், விவேகானாந்தன், பி.எஸ்.ஏகாம்பரம், கே.கோபிராஜ், சங்கா், கீழ்மட்டை முருகேசன், ஏகாம்பரம், குமாா், செல்வராசு, ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணியை அடுத்த சேவூரில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

அமைச்சா் எஸ்.ராமச்சந்திரன் ஆணைக்கிணங்க புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் சேவூா் ஜெ.சம்பத் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் சேவூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் குமரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT