திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: அமைச்சா் எ.வ.வேலு தொடக்கிவைத்தாா்
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்க விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்க விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் சரவணன், கிரி, புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அஜிதா வரவேற்றாா்.
இதில், புதுப்பாளையம் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பொன்னி, முனியப்பன், பாரதிதாசன், சுந்தரமூா்த்தி, தீா்தமலை, ரமேஷ், பூங்கொடிஆனந்த், பவ்யா, தலைவா்களின் கூட்டமைப்பு தலைவா் சீனுவாசன், கொட்டகுளம் தலைவா் திருமலை, கல்லரைப்பாடி தலைவா் ஏழுமலை, ஓரவந்தவாடி தலைவா் விஜியலட்சுமிராஜாமணி, அல்லியந்தல் தலைவா் பொம்மிமுருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.