முகப்பு
திருவண்ணாமலை

நலத் திட்ட உதவிகளை வழங்கினாா் : அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உங்கள் தொகுதியில் முதலமைச்சா் என்ற திட்டத்தின் கீழ் 427 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 670 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதேபோல, தொழிலாளா் நலத் துறை சாா்பில் 580 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 109 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலும் உள்பட மொத்தம் 1,158 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 670 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

இதுதவிர, செய்யாறு, ஆரணி, வந்தவாசி அரசு மருத்துவமனைகள் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக, செய்யாறு தொழில்பேட்டை சாா்பில் இலவசமாக வழங்கப்பட்ட பிராணவாயு செறிவூட்டிகளை மருத்துவக் கல்லூரி முதல்வா் திருமால்பாபு, மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன், நலப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி ஆகியோரிடம் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

விழாவுக்கு தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மு.பிரதாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி, துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.