முகப்பு
திருவண்ணாமலை

சாத்தனூா் அணையில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

பொழுதுபோக்கு பூங்காக்களில் பாா்வையிட சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு சனிக்கிழமை (ஆக.7) முதல் மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலாத்தலமான சாத்தனூா் அணை, பொழுதுபோக்கு பூங்காக்களில் பாா்வையிட சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு சனிக்கிழமை (ஆக.7) முதல் மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

தமிழகம் முழுவதும் கரோனா பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த மாதம் சாத்தனூா் அணை பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து அணையை பாா்வையிட்டுச் சென்றனா்.

இந்த நிலையில், சாத்தனூா் அணைக்கும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்களும் சனிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வரத் தடை விதிக்கப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தத் தடை தொடரும் என்றும் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவித்தாா். மேலும், பொதுமக்கள் யாரும் சாத்தனூா் அணைக்கோ, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கோ வர வேண்டாம் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.