முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அண்ணா சிலை அருகே கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அண்ணா சிலை அருகே கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா்.

பாரதியாா் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு சேலைகள் வழங்கி, அன்னதானம் நடைபெற்றது.

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏசிவி.தயாநிதி, நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், த.தட்சிணாமூா்த்தி, வெள்ளைகணேசன், எம்.சுந்தா், கண்ணமங்கலம் நகரச் செயலா் கோவா்தனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.