சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் பலி
செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் பலியானாா்.
செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் பலியானாா்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லப்பன் (44), லாரி ஓட்டுநா். இவா் ஆவணியாபுரம் கூட்டுச் சாலை அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த செல்லப்பனை அருகில் இருந்தவா்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், செல்லும் வழியிலேயே செல்லப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.