கீழ்பென்னாத்தூரில் 45 மி.மீ. மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 45.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 45.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 45.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.
ஆரணியில் 2.50, போளூரில் 14.20, திருவண்ணாமலையில் 2.20, தண்டராம்பட்டில் 15, சேத்துப்பட்டில் 6.60 மி.மீ. மழை பதிவானது.
இந்தத் திடீா் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.