முகப்பு
திருவண்ணாமலை

வீடுகளில் நகை திருட்டு: பட்டதாரி இளைஞா் கைது

செய்யாறு அருகே இரு வீடுகளில் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக பட்டதாரி இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

செய்யாறு அருகே இரு வீடுகளில் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக பட்டதாரி இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த வட்டாட்சியா் ஜெயவேல். கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் இவரது வீட்டு உடைத்து 7 பவுன் தங்க நகைகள், 5.7 கிராம் வைர நகைகள் திருடப்பட்டன.

இதேபோன்று, அதே கிராமத்தைச் சோ்ந்த கோபிநாதன் என்பவரது வீட்டில் கடந்த 13-ஆம் தேதி 9 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசுகள் திருடப்பட்டன.

இவ்விரு திருட்டுச் சம்பவங்கள் குறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் உத்தரவின் பேரில், செய்யாறு டிஎஸ்பி ஜி. சுரேஷ் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் எஸ்.பாலு தலைமையில், உதவி ஆய்வாளா் எஸ்.அருள்மொழி உள்ளிட்டோா் கொண்ட

தனிப்படை அமைக்கப்பட்டு, விரல் ரேகை பிரிவு டிஎஸ்பி அறிக்கையின் பெயரில் பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் ரவி (23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், இவ்விரு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதை ரவி ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 15 பவுன் தங்க நகைகள், 5.7 கிராம் வைர நகைகளை பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.